ADVERTISEMENT

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு!- தடையை விலக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

05:17 PM Nov 13, 2019 | santhoshb@nakk…

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதியரசர் அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT


அப்பாவு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்‘இந்த வழக்கு தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு அல்லவே? எனவே, இவ்வழக்கில் இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிடவேண்டுமா?’ என்று கேட்டனர். இதற்கு இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரத்தோஹி‘இந்த வழக்கு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கெஜட்டட் அதிகாரிகளா? அவர்கள் தபால் வாக்குகளை அட்டெஸ்டேஷன் பண்ண முடியுமா? என்ற கேள்வி சம்மந்தமானது.

ADVERTISEMENT



எனவே, இந்த சட்டவினாவில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விளக்கவேண்டும். இது குறித்து விரிவாக நான் வாதிட தயாராக உள்ளேன்.’என்றார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே வழங்கிய தடை ஆணையை விலக்க மறுத்ததோடு, வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT