ADVERTISEMENT

இன்னும் சற்று நேரத்தில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை.. அப்பாவு, இன்பதுரை வருகை!

10:39 AM Oct 04, 2019 | kalaimohan

இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கின்ற நிலையில் திமுகவை சேர்ந்த அப்பாவு, அதிமுக எம்.எல்ஏ இன்பதுரை ஆகியோர் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும் 203 தபால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார் .

ADVERTISEMENT

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.


அதிமுக எம்எல்ஏவின் மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு தடைவிதிக்க முடியாது என கூறி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நிலையில், இருப்பினும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திரன் பட் அமர்வு இன்பதுரையின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க உள்ளனர்.

இந்நிலையில் மொத்தம் 4 பெட்டிகளில் தபால் வாக்குகள், 19, 20, 21 சுற்றுகளில் வாக்கு பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் சென்னை உயர்நீதிமன்றதிற்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு மூன்று சுற்றுகளாக இந்த வாக்குகள் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுகவை சேர்ந்த அப்பாவு, அதிமுக எம்.எல்ஏ இன்பதுரை ஆகியோர் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT