ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றிக்கு எதிரான வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும்எண்ண நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தபால் வாக்குகளை நாளைக்குள் தலைமை பதிவாளரிடம்சமர்ப்பிக்க உத்தரவும்பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

Radhapuram Re-Count ... Postal Ballot Collection in the presence of Collector

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லைராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும்203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் தபால் ஓட்டுக்களை மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தபால் வாக்குகளை நாளைக்குள் தலைமை பதிவாளரிடம்சமர்ப்பிக்க உத்தரவும்பிறப்பிக்கப்பட்டது. தற்போது நெல்லை ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் உள்ள தபால் வாக்குப்பெட்டியை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சேகரித்தார்.

Advertisment

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.