ADVERTISEMENT

ஹைட்ரோ கார்பன் எடுக்காதே! காவேரியை தடுக்காதே! உயிர்பலி ஆனாலும் அறப்போராட்டம் தொடரும்-பெ.மணியரசன் பேட்டி

04:09 PM Jun 26, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது..

ADVERTISEMENT

கந்தர்வகோட்டையில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள வேளாண் விதை உற்பத்தி பண்ணை நிலத்தடி நீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இழந்து நிற்கிறார்கள். மீண்டும் பண்ணையை திறந்து விதை உற்பத்தியை தொடங்க வேண்டும். மேலும் பூரண மதுவிலக்கு என்பதை வலியுறுத்தி மகளிர் ஆயம் போராட்டங்களை நடத்தி வருகிறது.

அதே நேரத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி கல்லாக்கோட்டையில் சாராய ஆலை செயல்படுகிறது. இவற்றை மூடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28 ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கிராமம் கிராமமாக கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வரிடம் கொடுப்போம்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் பேரழிவுத் திட்டம் என்று விவசாயிகள் போராடிய போது வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்ய சொன்ன அப்போதைய முதல்வர் ஜெ. 2015 ம் ஆண்டு தடைபோட்டார். அந்த தடை இன்றுவரை உயிருடன் உள்ளது. ஆனால் ஜெ. வின் பெயரை அம்மா அம்மா என்று மூச்சு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி அரசாங்கம் ஜெ. ஆணைக்கு விரோதமாக ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி அளித்துள்ளது வேதனை அளிக்கிறது.


ஹைட்ரோ கார்ப்பன் எடுப்பது தான் நாட்டின் வளர்ச்சி என்கிறார்கள். அப்படியானால் நெல், வாழை, போன்ற தாணியங்களின் விளைச்சல் வளர்ச்சி இல்லையா? இவையெல்லாம் அழிவுகளா? நிலத்தை நஞ்சாக்கி விவசாயிகளை வெளியேற்றுவதும் தான் வளர்ச்சியா? பன்னாட்டு கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து நம்மை அழிக்க மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது.


இந்த நிலையில் தான் ஜூலை 2 -ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்காதே! காவேரியை தடுக்காதே என்ற முழக்கத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். உயிர்பலி ஆனாலும் அறப்போராட்டம் தொடரும்.

மசூத் உசைன் தலைமயிலான காவேரி ஆணையம் என்பது பொம்மை ஆணையம். அவர் பொய் சொல்ல கூச்சப்படாதவர். மே 28 ந் தேதி தமிழகத்திற்கான தண்ணீரை திறக்க சொன்னார். ஆனால் எந்த சட்டரும் திறக்கவில்லை. ஆனால் 1.88 கனஅடி தண்ணீர் விட்டதாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார். சாக்கடை கழிவுகள் வந்ததை தண்ணீர் வந்ததாக சொல்கிறார். சாவி கொடுத்த பொம்மையாக பேசுகிறார். அதனால் தான் சொல்கிறோம் தமிழகத்தை வஞ்சிக்கும் இந்த ஆணையம் வேண்டாம். முழுநேர அரசு அதிகாரிகளை கொண்டு ஆணையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தவறினால் உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டும்.


அங்கே மழை இல்லை அணையில் தண்ணீர் இல்லை என்கிறார்கள். இருக்கும் நீரில் பங்கீட்டை கொடுக்க ஏன் வலிக்கிறது. இந்த நிலையில் ஏன் தண்ணீர் கொடுக்கவில்லை என்று கேட்க முடியாத ஆணையம் ஜூலைக்கு 31 டி எம் சி தண்ணீர் கொடு என்று சொல்கிறது. இதையும் அவர்கள் மதிக்கப் போவதில்லை என்றார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT