ADVERTISEMENT

 காமராஜர் கட்டிய அணைக்கட்டை சீரமைக்க  நிதி வழங்கிய பள்ளி மாணவர்கள்

09:12 PM Jul 15, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காமராஜர் பிறந்த நாளில் பள்ளியில் கலை விழா நடந்தது. விழாவில் பல மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து வந்தனர். மேலும் பள்ளி விழாவில் குளம் சீரமைக்கும் இளைஞர் மன்றத்தினரை அழைத்து பள்ளி மாணவர்கள் தங்களின் சிறுசேமிப்பு பணம் ரூ. 10 ஆயிரத்தை வழங்கி காமராஜர் கட்டிய அணைக்கட்டில் தண்ணீர் சேமிக்க அதை சீரமைக்க எங்களால் இயன்ற உதவி என்று வழங்கினார்கள். அந்த நிதியை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

ADVERTISEMENT

காமராஜர் அணையை சீரமைக்க நிதி வழங்கிய மாணவர்கள் கூறும் போது.. எங்க ஊர்ல குளம் சீரமைக்கிறார்கள். ஆனால் பணம் பற்றாக்குறை உள்ளதாக சொன்னார்கள். அதனால் நாங்க வீட்டில் உண்டியலில் சேமித்து வைத்திருந்த சேமிப்பு பணத்தை எல்லாரும் கொண்டு வந்து கொட்டி எண்ணினோம். ரூ. 10 ஆயிரம் வரை வந்தது. உடனே பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி மூலம் சீரமைப்பு குழுவுக்கு தகவல் சொல்லி காமராஜர் பிறந்த நாளில் கொடுத்திருக்கிறோம் என்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியை கூறும் போது.. எங்கள் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள் முதலில் அவர்களின் பெற்றோர்கள் சம்தத்துடன் அவர்களின் சேமிப்பை கொடுக்க முன்வந்தனர். அதைப் பார்த்த மற்ற மாணவர்களும் பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று அவர்களின் உண்டியல் சேமிப்பை கொண்டு வந்தனர். அந்த பணத்தை காமராஜர் அணைக்கட்டை சீரமைக்க அவர் பிறந்த நாளில் வழங்கி இருக்கிறோம் என்றனர்.

நிதியை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் கூறும் போது.. முதலில் 100 நாள் வேலை செய்து சேமித்த பணத்தை ராஜம்மாள் பாட்டி வழங்கி எங்களை ஊக்கப்படுத்தினார். பிறகு சில மாணவர்கள் தங்கள் சேமிப்பை கொடுத்தார்கள். இப்போது ஒரு பள்ளி மாணவர்கள் அனைவரும் நிதி கொடுக்கிறார்கள். மாணவர்களை பாராட்டினோம். ஆவர்களின் சேவை எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT