Skip to main content

காமராஜர் பிறந்தநாளில் மரம் நடும் விழாவில் பிரேசில் நாட்டு பள்ளி மாணவர்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே கணவாய்ப்பட்டி பஸ்ட் ஸ்டெப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கயல்விழி வரவேற்றார்.

kamarajar birthday

விழாவில் பஸ்ட் ஸ்டெப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிப்பதற்காகவும், இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரங்களை கற்றுக் கொள்வதற்காகவும் பிரேசில் நாட்டில் இருந்து இந்தியா வந்திருக்கும் பள்ளி மாணவன் இன்சோசௌசோ மரக்கன்றுகளை நட்டு வைத்தான். 

kamarajar birthday


பிரேசில் நாட்டு பள்ளி மாணவனோடு இணைந்து பஸ்ட் ஸ்டெப் பள்ளி மாணவர்களும் 117 மரக்கன்றுகளை கணவாய்ப்பட்டி, கெங்குவார்பட்டி சாலையில் நட்டு வைத்தனர். பிரேசில் நாட்டு பள்ளி மாணவனின் இன்சோ சௌசோ காமராஜரின் கல்வி சேவையையும், அவரின் வாழ்க்கை வரலாற்றை குறித்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினான். மரக்கன்று நடும் விழாவின் போது இந்திய  தேசிய கொடியோடு பிரேசில் நாட்டு கொடியையும் மாணவர்கள் கையில் ஏந்திப் பிடித்து இருந்தனர். விழாவில்  ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாதவன், காசி, சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரியா நன்றி கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

'கலைஞர் 100' நிகழ்ச்சி இடமாற்றம்!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
'kalaignar 100' show transfer

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் இந்த நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து வருகிற 24 ஆம் தேதி நடப்பதாகத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி தள்ளிப் போய் அடுத்த மாதம் 6 ஆம் தேதி (06.01.2024) சனிக்கிழமை அன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அனைத்து விதமான தமிழ் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த 'கலைஞர் 100' நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ரஞ்சிக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாலும், இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.