ADVERTISEMENT

5 வருடங்களாக வளர்த்த மரத்தை வெட்டி வீச மனமில்லை.. வேரோடு பிடிங்கி நட்ட இளைஞர்கள்...

07:17 AM Sep 21, 2019 | santhoshkumar

இன்றைய காலகட்டத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மரங்களை வெட்டி அழிப்பதும் தீ வைத்து எரிப்பதும் சாதாரணமாகிவிட்டது.
ஆனாலும் தற்போதைய இளைஞர்கள் நீர்நிலைகளை சீரமைப்போம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம் என்ற உறுதிமொழியோடு களமிறங்கி நீர்நிலைகள் பாதுகாப்பையும் மரக்கன்றுகள் நடுவதையும் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த காலங்களில் எந்த ஒரு விழாவானாலும் மரக்கன்றுகளை நட்டு தொடங்குவதுடன் அதன் பிறகு கவனிக்காமல் அதே இடத்தில் அடுத்த வருடமும் கன்று நட்டும் படம் எடுத்து பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பு கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்தும் வருகின்றனர்.

நீர்நிலைகளில் குறுங்காடுகளை அமைத்து பறவைகளையும் பாதுகாக்கும் முயற்சியும் உள்ளது இளைஞர்களிடம். கஜா புயல் பல கோடி மரங்களை அழித்தாலும் அதைவிட பல மடங்கு மரங்களை உருவாக்குவோம் என்கிறார்கள் இளைஞர்கள்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர் வீரமணி மழைநீர் சேமிப்பு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மரங்கள் வளர்ப்பது போன்ற பலவற்றை தன்வீட்டில் செய்து சாதித்து வருகிறார்.
தற்போது அவரது அடுத்த சாதனையாக தன் வீட்டுக்கு முன்பு தாழ்வாரம் அமைக்க தடையாக வாசலில் நின்ற சாத்துக்குடி மரத்தை வெட்ட பலரும் சொன்ன போது 5 வருசம் தண்ணீர் ஊற்றி வளர்த்த மரத்தை வெட்டி அழிக்க முடியாது. மாற்று இடத்தில் பிடிங்கி நடுவோம் என்றவர் இயந்திரத்தின் உதவியை நாடினார், பயனில்லை. அதனால் மாற்று இடத்தில் பெரிய குழி தோண்டி வைத்துவிட்டு மரத்தின் வேர்பகுதி வரை மண் அள்ளி விட்டு தண்ணீரை ஊற்றிக் கொண்டு மரத்தில் கம்புகளை கட்டி அதில் ஜாக்கி வைத்து மரத்தை மேலே ஏற்ற ஒரு வேர் அறுகாமல் வெளியே வந்தது. சில இளைஞர்களின் உதவியுடன் தூக்கிச் சென்று தயாராக இருந்த மாற்று இடத்தில் நட்டுவிட்டார். வீரமணியின் இந்த செயலை இளைஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT