ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை!!!

04:49 PM Jul 24, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று புதுச்சேரியை அடுத்த வில்லியனூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் மர்மநபர்கள் யாரோ காவித்துணியை போர்த்தியிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சென்று சிலைக்கு முன்பு அமர்ந்து சிலைக்கு காவி துண்டு அணிவித்தவரை தண்டிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மேற்குப்பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.ஆர். சிலையில் போடப்பட்ட காவித்துண்டை அகற்றிவிட்டு மாலை அணிவித்தனர். மேலும் வில்லியனூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆராய்ந்ததுடன் அருகிலுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்தார். “தலைவர்களின் சிலைகளை அவமதிப்போர் மீது புதுச்சேரி அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார். அதேபோல் இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.


இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அறிவிக்கப்பபட்டதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். காவி துண்டு அணிவித்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறைக்கும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கறுப்பர் கூட்டம் சுரேந்தர் இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு வந்தது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். கந்தசஷ்டி பற்றி விமர்சனம் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சுவரொட்டி ஒட்டும்போது அச்சகத்தின் பெயர் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களைப் பற்றி விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT