thiruvottiyur young women incident police action taken by admk executive

Advertisment

இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற அதிமுக நிர்வாகியைபோலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர்பகுதியைச் சேர்ந்தவர்கோகுலகிருஷ்ணன் (வயது 28). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதுடன் திருவொற்றியூர்மேற்கு பகுதி அதிமுக மாணவரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவரும்அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும்இளம்பெண்ஒருவரும் கடந்தநான்கு ஆண்டுகளாககாதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும்இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்துகோகுலகிருஷ்ணனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.

இதனால்கோபமுற்ற கோகுலகிருஷ்ணன் தனது நண்பர்கள் 4 பேர் உதவியுடன் இளம் பெண்ணை திருமணம் செய்யும் நோக்கில் கடந்த 21 ஆம் தேதி காலை வீட்டில் இருந்த இளம்பெண்ணைவலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இதனைக் கண்டஇளம்பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வந்தனர். கோகுலகிருஷ்ணன்,கடத்தப்பட்ட இளம்பெண் ஆகிய இருவரும் புதுச்சேரியில் உள்ள கோட்டைகுப்பம் என்ற பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி விரைந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டதுடன்கோகுல கிருஷ்ணனையும் கைது செய்தனர்.