ADVERTISEMENT

புதுச்சேரி- கவர்னர் கூட்டத்திலிருந்து முதல்வர் வெளி நடப்பு!

11:12 PM Sep 07, 2019 | kalaimohan

ரேஷனில் இலவச அரிசி மட்டுமே வழங்கவேண்டும் என்ற சட்டப்பேரவை தீர்மானத்தை கிரண்பேடி நிராகரித்ததால் முதல்வர், அமைச்சர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT


புதுச்சேரி அரசு சார்பில் நியாய விலைக்கடை மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும், வறுமைக்கோட்டிற் கு மேல் உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகின்றது. இலவச அரிசிக்கு பதில் அதற்கான பணத்தை வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டு உள்ளதால் கடந்த 6 மாதங்களாக இத்திட்டம் செயப்படுத்தவில்லை.

ADVERTISEMENT


இதனை எதிர்த்து நியாயவிலைக்கடையில் மட்டுமே அரிசி வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ஆளுநரிடம் அளிக்க இன்று மதியம் ஒரு மணிக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் நேரில் சென்று வலியுறுத்தினர். 20 நிமிட சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த முதல்வர் நாராயணசாமி, “அரிசி தான் தேவை என்ற தீர்மானத்தை ஆளுநரிடம் அளித்துள்ளோம். ஆனால் ஆளுநர் நிராகரித்து விட்டார். பணம் மட்டுமே வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பியதாக ஆளுநர் கூறினார். அதனால் வெளிநடப்பு செய்து வந்து விட்டோம்” என தெரிவித்தார்.

மேலும்,” ஆளுநரின் அராஜக போக்கை மத்திய அரசிடம் தெரிவிப்போம்” என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT