புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்றுசட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

அப்போது அவர் கூறியதவாது:

narayanasamy

Advertisment

Advertisment

“இந்திய நாட்டில் பொருளாதார வீழ்ச்சின் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பல பகுதிகளிலும் கலவரங்கள் நடந்து வருகிறது. அதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார மந்த நிலையால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி குறைந்துள்ளது. புதுச்சேரியை பொருத்தவரையில் வாகனங்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தால் வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசு ஜி.எஸ்.டி அமல்படுத்தியதால் தர வேண்டிய நிதி 14 சதவீத இழப்பீட்டு தொகை கடந்த ஆகஸ்ட் முதல் வழங்க வேண்டிய சுமார் ரூ.380 கோடி தரவில்லை. புதுச்சேரி வரியை நம்பியுள்ள மாநிலம். புதுச்சேரிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி கொடுக்காத காரணத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 18-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சனையை எழுப்பி, நிதி அமைச்சர் ஒத்துழைக்க கேட்க உள்ளோம் என்றார்.

தொடர்ந்து “ துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பல்வேறு கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். கிரண்பேடியின் உத்தரவுகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆளுனர் அல்லது துணை நிலை ஆளுநர் தனது முடிவை மத்திய அரசு ஏற்காத பட்சத்தில் அதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் “ என்று தெரிவித்தார்.