ADVERTISEMENT

இடைத்தேர்தல் எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்!

09:23 PM Oct 18, 2019 | santhoshb@nakk…

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி புதுச்சேரியிலுள்ள அனைத்து மதுக்கடைகள், சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் நாளை (19/10/2019) மாலை 06.00 மணி முதல் 21- ஆம் தேதி வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் புதுச்சேரியில் மதுக்கடைகள் இல்லாத போது, அருகிலுள்ள கடலூர் மாவட்டத்திலுள்ள மதுபான கடைகளுக்கு மதுபான பிரியர்கள் படையெடுப்பார்கள். இதனால் புதுச்சேரி மற்றும் கடலூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கடலூர் மாவட்டத்திலும் மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி 19- ஆம் தேதி(நாளை) மாலை 06.00 மணிமுதல் தேர்தல் நாளான 21- ஆம் தேதி வரையும், மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 24- ஆம் தேதியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மேற்படி தினத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் 19- ஆம் தேதி மாலை06.00 மணிமுதல் தேர்தல் நாளான 21- ஆம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 24- ஆம் தேதி எல்லா மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், எப்.எல்.3, பார் உரிமையாளர்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT