ADVERTISEMENT

காஷ்மீரில் சீத்தாராம் யெச்சூரி கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்டாவில் ஆர்பாட்டம்!

11:22 PM Aug 09, 2019 | kalaimohan

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள சீத்தாரம்யெச்சூரி, ராஜாவை விடுதலை செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து அங்கு இராணுவம் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காஷ்மீர் மாநில மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம்யெச்சூரி ஆகியோரை விமான நிலையத்திலேயே 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் காஷ்மீர் மாநில மக்களை சந்திக்க அனுமதியில்லை எனக்கூறி காவல்துறையினர் கைது செய்தனர்.

பாஜக அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் இந்திய மார்க்சிஸ்ட், மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் பழைய பேருந்துநிலையம் முன்பு ஐம்பதுக்கும் அதிகமான கம்யூனிஸ்ட் கட்சியினர் திடிரென திரண்டுவந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதே போல் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்கா அருகில் கூடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT