ட்விட்டரில் #StopHydroCarbon என்ற ஹாஷ்டாக் சென்னை அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertisment

hydrocarbon trends in twitter

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம், உணவு உற்பத்தி, என அனைத்தும் அழியும் நிலை உருவாகியுள்ளது என நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாருர், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், கூத்தாநல்லூர், சேத்தான் குளம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்காக 430 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் #StopHydroCarbon என்ற டேக் இன்று ட்விட்டரில் சென்னை அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertisment

இதில் கருத்து பதிவிட்டு வரும் சிலர் சிலமணிநேரங்களில் நேசமணியை உலக அளவில் ட்ரெண்ட் ஆக்கிய நம்மால் இதனை சென்னை அளவில் மட்டுமே நிகழ்த்த முடிந்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கான எதிர்ப்பை உலக அளவில் தெரியப்படுத்தும் வாய்ப்பாக இதனை பயன்படுத்த வேண்டும் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.