ADVERTISEMENT

அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

12:12 PM Dec 20, 2023 | kalaimohan

தூத்துக்குடி, நெல்லையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது.

ADVERTISEMENT

நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 12,659 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தற்காலிக புயல் நிவாரணமாக 7,033 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும; 4 மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 2,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் 47 ஆண்டுகளாக இல்லாத கனமழை பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்; தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததுள்ளது. அதனையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வந்த ஒன்றிய குழு இன்று ஆய்வு செய்துவரும் நிலையில் நாளை தூத்துக்குடியில் தமிழக முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் பேரிடர் மீட்புத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளின் நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT