ADVERTISEMENT

எந்தெந்த ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு?

09:48 AM Oct 06, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 7,921 மையங்களில் 41,93,996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இன்று (06/10/2021) மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒருமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இலத்தூர், செயின்ட் தாமஸ் மவுன்ட், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஒன்றியங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய் நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய ஒன்றியங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, திமிரி, வாலாஜா ஒன்றியங்களிலும், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டம், ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் ஆகிய ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெகிறது.

இதனிடையே, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. எந்த அசம்பாவிதமும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT