ADVERTISEMENT

சென்னை - தேவாலய வளாகத்தில் அனுமதி பெறாத கல்லறை! சடலத்தை கைப்பற்றிய போலீசார்!

11:22 AM Dec 27, 2018 | rajavel




சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அமைந்துள்ள தேவாலயத்தில் அனுமதி இல்லாமல் சிமெண்டரி பதப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது என்று இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த புகாரையடுத்து அந்த தேவாலயத்தில் வட்டாட்சியர் ஹேமலதா, வருவாய் கோட்டாட்சியர், கிராம வருவாய் அலுவலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு தரைதலத்தின் ஒரு பகுதியில் சுவரில் அடுக்கடுக்காக பெட்டி வடிவத்தில் சிறு சிறு கல்லறைகள் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு கல்லறைக்கு மட்டும் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT


இதனால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் அதனை உடைத்து பார்த்தனர். அப்போது உள்ளே சடலம் ஒன்று இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். கல்லறைக்குள் இருந்த சடலம் பம்மல் பகுதியைச் சேர்ந்த நோனப்பன் என்பவருடையது என தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து உடல் வெளியே எடுக்கப்பட்டு வழக்கமாக கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்யும் கல்லறையில் புதைக்கப்பட்டது. உரிய அனுமதி இல்லாமல்அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்க கூடாது என வருவாய் துறையினர் எச்சரித்தனர்.






இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவாலயத்தின் முன்னாள் தலைவர் மேத்யூ, பின்னால் பஞ்சாயத்து சுடுகாடு உள்ளது. அதனோடு சேர்ந்துதான் இந்த கல்லறை கட்டப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு அனுமதி கேட்டோம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் இறந்துபோனவரின் மனைவி தனது கணவனுக்கு பூஜை நடத்த வேண்டும் என்று கேட்டதால் அனுமதிக்கப்பட்டார். இறந்துபோனவருக்கு 75 வயது இருக்கும். முதல் முதலாக இந்த ஒரு சடலம் மட்டுமே கல்லறையில் வைக்கப்பட்டது என்று கூறினார்.

கல்லறைக்கு அனுமதி கிடைக்காதபோது ஏன் அங்கு சடலம் வைக்கப்பட்டது? என்று தேவாலய நிர்வாகிகளிடமும் நோனப்பனின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT