ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின் தடை... காட்டிக் கொடுத்த கண்காணிப்புக் கேமரா!!

08:01 AM Apr 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின், தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் 5 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு முடிக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்கள் தென்காசி அருகிலுள்ள யு.எஸ்.பி.பாலிடெக்னிக் கல்லூரியில் 5 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு பிற கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தமுள்ள 8 கண்காணிப்பு கேமராக்களும் இணைக்கப்பட்டுத் தனியான கண்காணிப்பு அறையில் மானிட்டர் செய்யப்படுகின்றன. அந்த அறையில் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் கட்சிகளின் வேட்பாளர்கள் என அனைவரும் அமர்ந்து கண்காணிக்கின்றனர். அந்த அறையில் ஒவ்வொரு தொகுதிக்கான சி.சி.டி.வி. காட்சிகள் கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு டி.வி.யிலும் ஒளிபரப்பாகிறது.

இந்த நிலையில், நேற்று (13.04.2021) நள்ளிரவு கண்காணிப்பு அறையிலுள்ள டி.வி.யில். ஸ்டாராங் ரூமில் கரண்ட் கட் ஆனது தெரிய வந்துள்ளது. ஆனால் கண்காணிப்பு அறையில் மின் தடையில்லை. இந்த தகவல் திமுகவின் மா.செ. சிவபத்மநாபனுக்குத் தெரியவர, அவர் மற்றும் மதிமுகவினர், காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், சங்கரன்கோவில் வேட்பாளர் ராஜா ஆகியோர் கட்சியினருடன் சென்று மாவட்டக் கலெக்டரான சமீரனிடம் புகார் கொடுத்துள்ளனர்.

மின்தடை ஏற்படுவது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்கிறார் மா.செ. சிவபத்மநாபன். ஆனால் கலெக்டரான சமீரனோ, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்ட கேமராக்கள் பிரச்சினையின்றி இயங்குகின்றன. ஆலங்குளம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மட்டுமே சில நிமிடங்கள் கேமரா இயங்கவில்லை என்றிருக்கிறார்.

அதனை முகவர்கள் முன்னிலையில் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றிருக்கிறார் மா.செ. சிவபத்பநாபன். இந்த சம்பவம் பரபரப்பான பேச்சாகியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT