ADVERTISEMENT

உயிரை வாங்கிய சாலைப்பள்ளம்; ஒரு மணி நேரமாக சாலையில் கிடக்கும் சொமேட்டோ ஊழியரின் உடல் 

03:15 PM Nov 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் சொமேட்டோ ஊழியர் விரைவு சாலையில் மழையால் ஏற்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழையானது பொழிந்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த தனியாக நிறுவன ஊழியர் ஒருவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், சென்னை மணலி கெனால் ரோடு சந்திப்பு பகுதியில் சாலையில் உணவு டெலிவெரிக்காக சென்ற சொமேட்டோ ஊழியர் ஒருவர் அந்த பகுதியில் மழைநீர் அரிப்பால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தடுமாறி விழுந்தார். அப்பொழுது பின்புறம் வந்த லாரி அவர் மீது ஏறி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து நிகழ்ந்து சுமார் ஒரு மணி நேரமாக அந்த ஊழியரின் சடலம் சாலையிலேயே கிடக்கிறது. உயிரிழந்து கிடைக்கும் சொமேட்டோ ஊழியர் யார் என்பது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.விபத்தில் ஊழியரின் செல்போன் உள்ளிட்டவை முழுமையாக சேதமடைந்ததால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT