ADVERTISEMENT

முதலமைச்சர் உதவியை நாடும் ஏழை மாணவி... 

06:07 PM Jun 25, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி காயத்ரி தனது கல்லூரிப் படிப்பை தொடர, தனியார் கல்லூரியில் கொடுத்த தனது சான்றுகளை பெற்றுத் தரக்கோரி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனது இந்த கோரிக்கையை வீடியோவில் வடிவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அதில் அந்த மாணவி கூறியதாவது, “எனது பெயர் காயத்ரி, ஈரோடு மாவட்டம் வல்லகவுண்டம் எனும் குக்கிராமத்தில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். நான் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பை முடித்தேன். எங்களுடைய வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி என்பதால் மருத்துவத்துறையை எடுத்து படிக்க விரும்பினேன். மருத்துவத்துறையில் சேர வேண்டும் என்பதற்காக பாராமெடிக்கல் கவுன்சிலிங்காக விண்ணபித்திருந்தேன்.

ADVERTISEMENT

பின்னர் அதில் எனக்கு அரசு கல்லூரி கிடைக்கும் என்று நினைத்து விண்ணப்பித்தேன். ஆனால் தனியார் கல்லூரி தான் கிடைத்தது. அதன் பின்னர் நானும் 30 விருப்ப கல்லூரிகளை விண்ணப்பித்து அனுப்பினேன் அதில்தான் எனக்கு குன்றத்தூர் மாதா கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்நிலையில் வேறு வழி தெரியாமல் கடைசி தேதி அன்று கல்லூரிக்கு நேரடியாக சென்றோம். அங்கு அவர்கள் இன்று அட்மிஷன் போட்டால் மட்டுமே கவுன்சிலிங் சீட் இல்லையென்றால் மேனேஜ்மண்ட் சீட் தான் என்று கூறினார்கள். இவ்வாறு கூறியதால் நாங்களும் அட்மிஷன் போட்டுவிட்டு, விடுதியை பார்க்கலமா என்று கேட்டோம் முடியாது என்று கூறிவிட்டார்கள், நாங்களும் வீட்டிற்கு வந்து விட்டோம்.

கல்லூரி ஆரம்பித்த நாளன்று என்னை என் பெற்றோர்கள் கொண்டு சென்று விடுதியில் விட்டுவிட்டு வந்தனர். அங்கு விடுதி முழுவதும் மிகவும் குப்பையாக இருந்தது, பெற்றோர்கள் உடனிருந்து கேட்கும் பொழுது அறையை சுத்தம் செய்து தருவோம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள் சென்ற பின்பு எதுவும் செய்து தர முடியாது என்று கூறிவிட்டார்கள். அங்கு உணவு, இடம், கழிப்பறை எதுவுமே சரியில்லை அதனால் நான் அப்பாவிற்கு தொடர்புகொண்டு அழுதேன். அப்பாக்கும் இங்கு பணக்கஷ்டம் என்பதால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். நானும் என்னால் இங்கு இருக்க முடியாது என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டேன். அப்போது அப்பா கல்லூரி தலைமையாசிரிடம் சான்றுகளை திரும்ப தர சொல்லி பேசினார்.

அவரும் 8 லட்சம் பணம் கட்டினால் மட்டுமே திரும்ப தருவோம் என்று கூறிவிட்டார்கள். கல்லூரி கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் நாங்கள் படிக்க முடியவில்லை என்று கூறியும், அவர்கள் கண்டிப்பாக கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றுகளை திரும்ப தர முடியும் என்று கூறினார்கள். இதனை நாங்கள் டி.எம்.இ மற்றும் பல்கலைக்கழக அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தோம். அவர்கள் புகார் மட்டுமே பதிவு செய்வோம் ஆனால் சான்றுகள் தர சொல்லி கல்லூரியுடன் பேச மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம் அவர்கள் புகார் பதிவு செய்து ரசீதை கொடுத்தார்கள். அதனை வைத்து விடுதியில் உள்ள எனது பொருட்களை எடுத்து வந்தோம்.

அதன்பின்பு பல மாதங்கள் கழிந்தது எனது ஒரு வருடம் படிப்பு காலமும் வீணாகிவிட்டது. இப்போது வேறு எதுவும் படிப்பதற்காக சான்றுகள் தேவை ஆனால் எவ்வாறு பெற வேண்டும் என்றே தெரிவியவில்லை. இதற்கு தமிழக முதலமைச்சர் நிச்சயம் உதவி செய்வார்கள் என நம்பி இந்த பதிவில் கோரிக்கை வைத்துள்ளேன்” இவ்வாறு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT