ADVERTISEMENT

சிலைகளை சிறைக் கைதிகளைப்போல அடைத்துவைக்க கூடாது; திருவாரூரில் பொன்.மாணிக்கவேல்

03:10 PM Mar 09, 2019 | selvakumar

"சிலைகளை சிறைக் கைதிகளைப் போல அடைத்து வைக்கக் கூடாது, ஒவ்வொரு கோயிலிலும் பாதுகாப்பகம் அமைத்திட வேண்டும்".என்றார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல்.

ADVERTISEMENT

திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 4539 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த சிலைகளின் நிலை குறித்து அறிய, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியுடன் ஐந்தாவது கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் கூறுகையில், "திருவாரூர் சிலைகள் காப்பகத்தில் உள்ள 5359 சிலைகளில் 1897 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பதில் உள்ள ஏ.சி மிசின் எதுவும் வேலை செய்யவில்லை. பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கடிதங்கள் கொடுத்துவிட்டோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைகழிக்கிறார்.

இத்தனை ஆயிரம் சிலைகள் இங்கு வைக்க போதிய இடவசதியும் இல்லை. அனைத்து சிலைகளும் வழிபாட்டுக்கு உரியதாகும். அவை அந்தந்த கோயில்களில் பாதுகாப்பகம் அமைத்து வைக்கவேண்டும். சிறைக் கைதிகளைப் போல சிலைகளை அடைத்து வைக்கக்கூடாது. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட சிவபுரம் நடராஜர் சிலை மட்டுமே திருவாரூர் காப்பகத்தில் 31 ஆண்டுகளாக உள்ளது.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் சிலை காப்பகம் அமைக்க பலமுறைக்கூறிவிட்டோம். இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. காப்பகம் அமைக்க ஒன்றரை ஆண்டுகளாக அறநிலையத்துறை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் பலமுறை போராடிவிட்டோம், உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் ஆய்வு பணிகளை விரைவில் நடைபெறுகிறது. இதில் சிலைகளில் உலோகத் தன்மை குறித்து முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும் என்பதால் உரிய கால அவகாசம் நீதிமன்றத்தில் கேட்க உள்ளோம்.

அனைத்து சிலைகளுக்கும் விபரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தால் எந்த வெளிநாடுகளுக்கும் சிலைகள் கடத்த முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். எனவே கோயில்களில் பாதுகாப்பு பணிக்கு உரிய பாதுகாவலர்கள் உடனே நியமிக்கப்பட வேண்டும். அதுவரை இரவு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்திட வேண்டும்."என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT