திருவாரூர் அருகே குளத்தை தூர்வாரும்போது பழமையான ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளதை மக்கள் ஆர்வமாக பார்த்துவருகின்றனர்.
திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் உள்ள பிடாரி குளத்தில்தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குளத்தில் தூர்வாரும் பணிக்காக பாதை அமைத்தபோது திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்துமக்கள் சென்று பார்த்தபோது அங்கே இரண்டரை அடி உயரமுள்ள 80 கிலோ எடை கொண்ட சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் ஒரே பீடத்தில் அமைந்த சிலை காணப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனையடுத்து குடவாசல் காவல்துறையினருக்கும், வருவாய்வட்டாட்சியருக்கும்தகவல் தெரிவித்து அவர்கள் நேரில் ஆய்வு செய்த பின்னர் சிலைகளை திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மீட்கப்பட்ட சிலை குறித்து பொதுமக்கள் கூறுகையில், ’’கடந்த 1970 ஆம் ஆண்டு இந்த சிலைகள் காணாமல் போனது, இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் கிடைத்ததை தொடர்ந்து சிலைகளை கிராமத்திலேயே வைத்துபூஜை செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என்றனர்.