ADVERTISEMENT

சிலை கடத்தல் வழக்குகளை முடிக்க முகாமிட்டு அதிரடிகாட்டும் பொன்.மாணிக்கவேல்

09:21 PM Apr 27, 2019 | selvakumar

சிலை கடத்தல் வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் முகாமிட்டு அதிரடி காட்டிவருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நம் முன்னோர்களால் கலைநயத்துடன் உருவாக்கிய சிலைகள் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு அழகு சேர்த்துவந்தன. அதன் ஒவ்வொன்றின் மதிப்புகளும் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் மதிப்பிடப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழமையான, சிதலமடைந்த, கேட்பாரற்ற நிலையில் இருந்த கோயில்களின் பிரதான சிலைகள், ஐம்பொன் மற்றும் விலைமதிக்க முடியாத உலோகத்தாலான சிலைகள், என ஆயிரக்கணக்கான சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களிலோ, கோயில் அதிகாரிகளிடமோ புகார் செய்தும் பயனில்லாமல் இருந்தது. போலீசாரும், அதிகாரிகளும் இதை பெரிதாக எடுத்துக்கொண்டு விசாரிக்கவில்லை.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியான ஐ,ஜி பொன்மாணிக்கவேலுவை நியமனம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தலை தடுக்கவும், திருடுபோன சிலைகளை கண்டுபிடித்து மீட்கவும், சிலை தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை, நியமனம் செய்ய உத்தரவிட்டது. அதோடு அவருக்கு தேவையான போலீஸ் அதிகாரிகளையும், போலீசாரையும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டனர்.

சிறப்பு அதிகாரியாக பதவியேற்ற நாள் முதல் அதிரடியாக களமிறங்கி சிலைத்திருட்டை தடுத்ததோடு, புகழ்பெற்ற சிலைகள் வெளிநாடுகளிலிருந்ததை மீட்டுக் கொண்டு வந்தார்.பந்தநல்லூர், திருவாரூர் ,கும்பகோணம் , உள்ளிட்ட சிலை காப்பகங்களில் சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிந்து வருகிறார்.

இதற்கிடையில்,தமிழகத்தில் உள்ள 531 சிலை திருட்டு வழக்குகளை கும்பகோணம் கோர்ட்டில் தான் நடத்த வேண்டும் என கோர்ட்டில் ஆணையை வாங்கினார். அதன்படி அனைத்து வழக்குகளும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிலைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி, அறநிலை துறை உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரையிலும், சிலைகடத்தல் மாபியாக்கள் வரை அனைவரையும் கண்டுபிடித்து சிறையில் அடைத்தார்.சிலை திருட்டில் ஈடுபட்ட போலீசாரையும் விட்டுவைக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிலைவழக்கு சூடுபிடித்துவந்த நிலையில் பொன்,மாணிக்கவேல் பதவி காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு முடிந்தது. பொன்,மாணிக்கவேலுவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பொன்மாணிக்கவேலுவிற்கு ஓரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் எஞ்சி இருக்கிற ஏழு மாதத்திற்குள் அனைத்துக்கு வழக்குகளையும் முடிக்க வேண்டும் என கும்பகோணத்தில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பரபரப்பாக கோப்புகளை படித்தும், விசாரித்தும் வருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT