ADVERTISEMENT

பொங்கல் பண்டிகை; ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

08:40 AM Sep 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி போகிப் பண்டிகையும், 15ஆம் தேதி தைப்பொங்கலும், ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கலும், ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ரயில்வே துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. ரயில் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையதளத்திலும், ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதே போல் ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் நாளை முதல் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்பவர்கள், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் ஜனவரி 14 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 15 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதலும், ஜனவரி 16 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி முதலும் ஜனவரி 17 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதலும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT