ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ரயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் காரணத்தால் ஐஆர்சிடிசி இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்தப் பிரச்சனையை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஈடுபட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பிரச்சனைமுடிவுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் குறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்படின் ரயில்வே உதவி மையத்தைத்தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் பராமரிப்புக்கு14646,0755-6610661 & 0755-4090600 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.