ADVERTISEMENT

கிரண்பேடி ஒரு சாபக்கேடு; காவிரி விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் - முதல்வர் நாராயணசாமி பேட்டி!

08:03 PM May 05, 2019 | sundarapandiyan

ADVERTISEMENT

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், ’’துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக அரசு அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவதாகவும், பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வதாகவும், அரசின் ரகசியங்களை சமூக வலைதளங்கள் மூலமாக கசிய விடுவது போன்ற ஜனநாயக விதிமுறைகளை மீறுவதாக உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்திற்கு இரண்டு பதில்கள் வந்துள்ளன.

ADVERTISEMENT

இதனை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் லஷ்மி நாரயணன் தொடர்ந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. அதில் துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டுமெனவும் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எடுக்கிற முடிவுகளை செயல்படுத்த வேண்டும்.

எந்தவித தனிப்பட அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது" என்றார். மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரி மாநில அரசு மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு சென்ற போது வழக்கு தொடர தடையாக இருந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் மக்களே அனுப்பிவிடுவார்கள்.

எனவே துணை நிலை ஆளுநருக்கு கோப்புகளை பார்ப்பதற்கும், அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவதற்கும், ஆய்வு நடத்துவதற்கும் அதிகாரம் இல்லை. ஆளுநர் அதிகாரம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பையொட்டி கிரண்பேடி மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் அவரது சொந்த செலவில் தான் செல்ல வேண்டும். இதன் பேரில் ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு தெரியாமல் மேல்முறையீடு செல்லக்கூடாது.

அப்படி சென்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செல்லக்கூடாது என்று தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் புதுச்சேரி அரசின் மீது தனது அதிகார துஷ்பிரயோகத்தை செய்து வந்த கிரண்பேடி ஒரு சாபக்கேடு’’ என்றும் முதல்வர் நாராயணசாமி கடுமையாக சாடினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT