ADVERTISEMENT

ஆர்.ஏ.புரம் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள் (படங்கள்) 

03:20 PM May 09, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் ஒருவர் தொடுத்த வழக்கில் மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள 259 வீடுகளையும் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி வீடுகளை இடிக்கும் பணி கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் மீண்டும் நேற்று வந்த போது, கண்ணையா என்ற முதியவர் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானர். இந்நிலையில், இன்று ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் மக்கள் அவர்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், அவர்களின் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

அதேசமயம், ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்படும் இடத்தை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், நேற்று தற்கொலை செய்துகொண்ட கண்ணையா குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.


அதேபோல், சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT