dmdk party vijayakanth, premalatha vijayakanth today discharged hospital

Advertisment

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருவருக்கும் மருத்துவ பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இருவரின் உடல்நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்" என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.