ADVERTISEMENT

காட்டன் சூதாட்டத்தை தடுக்க மாஸ் ரெய்டு... 32 பேர் கைது... எஸ்.பி எச்சரிக்கை...!

11:24 PM Feb 03, 2020 | Anonymous (not verified)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமாக காட்டன் சூதாட்டத்தினால் பல குடும்பங்கள் அழிந்து வருகிறது . இதுக்குறித்த பல புகார்கள் எஸ்.பி க்கு வந்தன. அதனை தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு பிப்ரவரி 1 ந்தேதி இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீதா மற்றும் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் இருவர் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள், 28 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 136 காவலர்கள் உள்ளடக்கிய 175 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் சிறப்பு ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அதில் இராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா,ஆற்காடு கிராமியம், ஆற்காடு நகரம், திமிரி, அரக்கோணம் நகரம், அரக்கோணம் கிராமியம், சோளிங்கர், ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் ஈடுபட்டு வந்த 32 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் கூறுகையில், லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் இருந்து யாரேனும் திருந்தி வாழ முன்வந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு மேற்கொள் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT