Ranipet police arrested two people

ராணிப்பேட்டை மாவட்டம் வழியாகச் செல்லும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாலாஜா சுங்கச்சாவடி அருகே போலீஸார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாகவந்தமினி லாரி ஒன்றை மடக்கினர். அதனை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 40 வயதான சின்னதம்பி என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் 40 வயதான வில்சன் அந்த வாகனத்தில் இருந்தார்.

Advertisment

வாகனத்தைச் சோதனை செய்தபோது 2 டன் எடையுள்ள அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பெட்டிகளில் பாக்கெட்களாக இருந்ததைக் கண்டறிந்தனர். இதைக் கண்ட போலீசார், உடனடியாக அந்த இருவரையும் கைது செய்தனர். அந்த வாகனத்தோடு அவர்களை வாலாஜா காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் எனச் சொல்லப்படுகிறது.

Advertisment

Ranipet police arrested two people

இது தொடர்பான விசாரணையில், சென்னையில் இருந்து வேலூருக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் பின்னணியில் இருப்பது யார், யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் குட்கா விவகாரத்தில் சிக்கி, சிபிஐ விசாரணை நடந்துகொண்டு இருப்பதுகுறிப்பிடத்தக்கது.