ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.க்கு காவலர்கள் கோரிக்கை 

10:25 AM Jan 31, 2019 | sekar.sp



போலீஸ் வாகனங்களை இரவு நேரத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட எ.ஸ்பி.க்கு காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் போலீஸ் வாகனம் ஒன்று இருக்கிறது. அந்த வாகனம் ஆய்வாளர்கள் செல்ல மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காவல் வாகனம் இரவு பணிக்கு செல்வதற்கு அதாவது உதவி ஆய்வாளர் செல்லும்போது அதை தர வேண்டும். அதுபோல் குற்றவாளிகள் கைது செய்யும்போது சிறையில் அடைக்க அந்த வாகனம் பயன்படுத்தலாம். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாகனம் ஆய்வாளர்கள் மட்டுமே அந்த வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இரவு பணி செல்லும் உதவி ஆய்வாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். தனது சொந்த வாகனத்தில் வாகனத்தில் ரோந்துபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

செஞ்சியில் மதுவிலக்கு பிரிவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓடியதாக இரண்டு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளளனர். இதற்கு காரணம் அவர்கள் குற்றவாளிகளை பேருந்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே அந்தந்த காவல்நிலையங்களில் தரப்படும் வாகனங்கள் குற்றவாளிகளை சிறைக்கு கொண்டு செல்ல எஸ்.பி. அனுப்ப உதவ வேண்டும். அதுபோல் இரவு பணியில் உள்ள உதவி ஆய்வாளர்களுக்கு அந்த வாகனத்தை தர உத்தரவிட வேண்டும். இதனால் பெரும்பாலான குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. காவலர்களின் இந்த கோரிக்கையை உடனே பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT