Skip to main content

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; மூவர் மீது போக்சோ வழக்கு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

villupuram kappiyampuliyur school students related incident  

 

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள காப்பியம் புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஒரு பள்ளி மாணவியும், மாணவனும் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்ற மூன்று வாலிபர்கள், மாணவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மாணவியின் வெள்ளி கொலுசு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்ததோடு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவி கூச்சலிட மூவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர்களை பிடிப்பதற்காக, விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மாணவி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் பற்றி அளித்த அடையாளங்களின்  அடிப்படையிலும், அப்பகுதியில் சம்பவத்தன்று செயல்பட்ட செல்போன் சிக்னலை வைத்தும் தீவிர விசாரணை செய்து வந்தனர். மேலும்  மாணவியிடம் இருந்து பறித்துச் சென்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது இயங்கி வந்துள்ளது. அந்த மொபைல் போன் சிக்னலை வைத்து கோலியனூர் அடுத்த குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குடியரசு (வயது 23), அபி என்கிற அபினேஷ் (வயது 23), அன்பு (வயது 22) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் மாணவனை கத்தியால் குத்தியது மற்றும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததும் தாங்கள் தான் என்பதை ஒத்துக்கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய பைக், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் விழுப்புரம் மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காதலர்கள் தனிமையில் சந்திக்கும் இடங்களை நோட்டமிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மிரட்டுவது அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிப்பது பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது மற்றும் வழிப்பறி கொள்ளை செய்வது என பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது இதை எடுத்து இவர்கள் மீது போக்சோ  சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர்கிறதா பழிவாங்கும் படலம்? அடுத்தடுத்து திருச்சியில் நடக்கும் கொலைகள்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Trichy is in a frenzy due to successive incidents

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. பல்வேறு தொழில்களை செய்து வந்த இவரது மறைவுக்குப் பிறகு அவரது தம்பி கேபிள் சேகர்  அண்ணனின் தொழிலோடு சேர்த்து பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் போன்ற தொழில்கள் செய்து வந்தார். கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார். சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன்(35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அரிமயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று கரூர் ஜே.எம்.-2 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த முத்துகுமார்(28), அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், அரியமங்கலம் காளியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19),   அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 4 பேரும் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில், அவர்கள் 4 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று (30.4.2024) காலை எஸ்ஐடி பகுதியில் உள்ள டீ கடையில் முத்துகுமார் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 2 பேர் முத்துகுமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர். சிலம்பரசன் கொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக ரவுடி முத்துகுமார், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் தஞ்சை மெயின்ரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
police action for Youth who tried to enter the vote counting center 

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது கடந்த 27 ஆம் தேதி (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அதோடு ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டது. 

police action for Youth who tried to enter the vote counting center 

இதற்கிடையே தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கொடுவாரூரியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி அருகில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று (29.04.2024) இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ. மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் வி.டி. நாராயனசாமியும், பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபாலும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.