ADVERTISEMENT

கேள்விக் கேட்ட மாணவர்களை அடித்து விரட்டும் போலீஸ்- 'மடிக்கணினி விவகாரம்'

07:02 AM Jun 30, 2019 | santhoshb@nakk…

திருவண்ணாமலை நகரத்தில் உள்ள டேனிஷ் மிஷன் என்கிற பள்ளியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜீன் 29ந்தேதி வந்துயிருந்தார். அப்பள்ளியில் தற்போது பயிலும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார். அந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்துக்கொண்டுயிருந்தபோது, கடந்த கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து தற்போது கல்லூரியில் இணைந்துள்ள அப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கவில்லை, எங்களுக்கு வழங்காதது ஏன், எங்களுக்கு எப்போது வழங்குவீர்கள் எனக்கேட்டு மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த போராட்டத்தை செய்தி சேகரித்துக் கொண்டுயிருந்த செய்தியாளர்களை நோக்கி திருவண்ணாமலை காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தன், செய்தியாளர்களை இழிவாக பேசியதோடு, ஒருமையில் பேசி மிரட்டினார். இதைக்கேட்டு அதிர்ச்சியான செய்தியாளர்கள், ஆய்வாளரின் பேச்சைக் கண்டித்தும், பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்மென சொல்லி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்தியாளர்களிடம் இந்த பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன் எனச்சொல்லி சமாதானம் செய்தார். இதனால் செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017- 2018 ஆம் ஆண்டு 12- ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தங்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க வில்லை என்று திருவண்ணாமலை- வேலூர் சாலையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் நின்றன. போலீசார் வந்து அவர்களை மிரட்டி கலைந்து செல்ல வைத்தனர்.


அதே போல், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காந்திநகர் மேல் நிலைப்பள்ளியில், ஜீன் 29- ஆம் தேதியான நேற்று தமிழக அரசு வழங்கும் இலவச இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இதே பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லையாம், அதனால் முன்னாள் மாணவர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை கேள்விக்கேட்டு போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையை வைத்து மிரட்டியும், அடித்தும் விரட்டியது காவல்துறை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT