ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன!

09:48 AM Mar 02, 2020 | santhoshb@nakk…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 24- ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 01.15 மணி வரை நடைபெறுகிறது. முதல் 10 நிமிடம் வினாத்தாள் வாசிக்கவும், அடுத்த 5 நிமிடம் ஹால்டிக்கெட் சுயவிவரத்தை சரிபார்க்கவும் மாணவர்களுக்கு நேரம் தரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 4.41 லட்சம் மாணவிகள், 3.74 லட்சம் மாணவர்கள் என 8.16 லட்சம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 19,166 சேர்த்து மொத்தம் 8,35,525 பேர் 3,012 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

குறிப்பாக சென்னையில் 410 பள்ளிகளிலிருந்து 160 மையங்களில் மொத்தம் 47,234 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல் புதுச்சேரியில் 149 பள்ளிகளிலிருந்து 40 மையங்களில் 14,958 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT