ADVERTISEMENT

பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் என்னென்ன...?

03:22 PM Feb 01, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2021) தாக்கல் செய்தார். சுமார் 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்தப் பட்ஜெட் உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு விரைவுச்சாலை, கடற்பாசி பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், 3,500 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக 1.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை - கொல்லம் இடையிலான நெடுஞ்சாலை திட்டமும், சித்தூர் - தட்சூர் இடையேயான நெடுஞ்சாலை திட்டமும் அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் 63,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். பல்நோக்கு கடற்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு இடையே 278 கிலோமீட்டர் நீள விரைவுச்சாலை அமைப்பதற்கான பணிகள் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்றும் சாலை கட்டுமானப் பணிகள் 2021 - 22 நிதியாண்டில் தொடங்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் இடையே 277 கிலோமீட்டர் நீளமுள்ள விரைவுச்சாலை திட்டம் அமைக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் 2021 - 2022 நிதியாண்டில் துவங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட நாட்டின் ஐந்து முக்கிய துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT