ADVERTISEMENT

ஜாதி, மதம் குறிப்பிடாத சமத்துவ சான்றிதழ் - சாதித்த பினராய் விஜயன்

10:15 PM Mar 31, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழகத்தில். ஜாதி மத பேதமில்லாமல் அனைவரும் ஆலயங்களில் அர்ச்சகராகலாம் என ஏட்டளவில் இருந்துவந்ததை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார் கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கேரள ஆலயங்களில் ஜாதி மதம் குலம், கோத்திரம் அனுஷ்டிக்காமல் மண்ணில் அவதரித்த மனிதர்கள் அனைவரும் ஒரே ஜாதியினர் என்கிற சமத்துவத்தை உணர்த்துகிற வகையில் அனைத்து சமூகம் சார்ந்தவர்களையும் அர்ச்சகராக நியமித்தார் முதலவர் பினராய் விஜயன்.

ADVERTISEMENT

அந்த வாய்ப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் கூட கொல்லம்,கோட்டயம் பகுதி ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டு இறைவழிபாட்டினை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதையடுத்து தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கீட்டின் படி கேரளாவிலுள்ள 147 சட்டமன்றங்களில் அடங்கியிருக்கிற அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலா மூன்று கோடிகளை ஒதுக்கிய முதல்வர் பினராய் விஜயன், அதன்மூலம் அரசுப் பள்ளிகளின் தரங்களை உயர்த்தியதோடு தற்போதைய முன்னேறிய தொழில் நுட்ப வசதிகளை அமைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கைத்தறித் துணிகளாலான சீருடையை இலவசமாக வழங்கியதின் மூலம்,நசிந்து கொண்டிருந்த கைத்தறி நெசவுத் தொழிலுக்கு உயிரூட்டியிருக்கிறார் முதல்வர் பினராய் விஜயன்.

கேரளாவிலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்கின்ற ஒரு லட்சம் மாணவர்கள், ஜாதி, மதம் குறிப்பிடாத சான்றிதழ்களுடன் பயின்று வருகின்றார்கள் என கடந்த 28ந் தேதி சட்டமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்வியில்லா நேரத்தின் போது பதிலளித்தார் கல்வி அமைச்சரான சி. ரவீந்திரன்.

கேரள மாநிலக் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் பினராய் விஜயன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT