ADVERTISEMENT

லிடியனின் பியானோ... சர்வம் படேலின் மணல் ஓவியம்... கலைமயமான செஸ் ஒலிம்பியாட்!

06:03 PM Jul 28, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெறவிருக்கும் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக போட்டியிடும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் தங்கள் நாட்டு தேசியக் கொடிகளை ஏந்தி சென்ற வீரர்களை தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வழிநடத்திச் சென்றனர். இதற்காக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகள் மூலம் 186 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசித்து அசத்தினார். கண்களைக் கட்டிக்கொண்டு, ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்தினார். அதேபோல் லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசிக்க சர்வம் படேல் மணல் ஓவியங்களை வரைந்து அசத்தினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT