ADVERTISEMENT

மருத்துவமனைக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

11:10 PM Dec 19, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட கீழ சன்னதியில் உள்ள தனியார் மருத்துவமனக்கு பன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (வயது 57) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் சனிக்கிழமை இரவு அவரை அழைத்து வந்தனர். அப்போது அவர் கீழ சன்னதிக்கு வரும் போது கீழ சன்னதி வாயிலில் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டுமென பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மருத்துவமனைக்கு உள்ளே வாகனத்தில் வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் அபாய கட்டத்தைத் தாண்டியதாக கூறியுள்ளனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 வாகனத்தை வர வைத்தனர்.

அப்போது 108 வாகனம் கீழ சன்னதிக்கு வந்தது. எனினும், சன்னதி வாயிலில் போராட்டம் நடைபெற்றதால் 108 வாகனம் சன்னதிக்குள் வருவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை காவல்துறையினர் ஓரமாக அனுப்பிவைத்து மயங்கி கிடந்தவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT