Skip to main content

108 ஆம்புலன்ஸ் வராததால் மாணவரை தூக்கிக்கொண்டு ஓடிய பொதுமக்கள். 

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் அப்பாஸ். இவர்கள் பெங்களூர் கே ஆர் புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். அப்பாஸ் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  இவர் உறவினர்களை சந்திப்பதற்காக ஆம்பூர் வந்தார். பின்பு செப்டம்பர் 12 ந்தேதி இரவு மீண்டும் பெங்களூரு செல்வதற்காக, ஆம்பூர் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லக்கூடிய லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றார். அப்போது தவறி விழுந்து இடது கால் முற்றிலும் சேதமடைந்தது. 

AMBUR RAILWAY STATION 108 AMBULANCE LATE STUDENT PEOPLES HELP ADMIT HOSPITAL


இதனை பார்த்த அங்கிருந்த ரயில் பயணிகள் மற்றும் ஆம்பூர் ரயில் நிலைய காவல்துறையினர், அந்த கல்லூரி மாணவனை மீட்டு அங்கேயே படுக்க வைத்துவிட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வராததால் அங்கிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த அப்பாஸை, ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கிக்கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இதனால் ஆம்பூர் ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.