ADVERTISEMENT

படித்துறை பாண்டியவே ஓவர் டேக் செய்யும் தியேட்டர்கள்!

12:21 PM Mar 03, 2020 | santhoshb@nakk…

சினிமா தியேட்டர்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இவ்வளவு தான் கட்டணம் என தமிழ்நாடு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. குறிப்பிட்டத் தொகையை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், "படித்துறை பாண்டியவே ஓவர் டேக் பண்றீங்களேப்பா.!" என வாகன கட்டணத்திற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் மீம்ஸை பரப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT

"அப்பு.! இங்கெல்லாம் வண்டிய நிப்பாட்டக்கூடாது. நிறுத்துனத்துக்கு பணத்தைக்கொடு.!' என இல்லாத குத்தகைக்கு கருப்பச்சாமி குத்தகைக்காரர் திரைப்படத்தில் நாயகன் கரணிடம் வசூல் வேட்டையை தொடங்குவார் படித்துறை பாண்டியான வடிவேலு. அவரோ, " தான் தான் குத்தைக்காரர்" எடுத்தியம்ப, "அப்பு.! நீ இங்க மட்டும் தான் எடுத்திருக்க.. நான் மதுரையையே ஏலம் எடுத்திருக்கேன்." என வடிவேலு சலம்பல் செய்தது இன்று வரை ரசிக்கும்படியான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று.

ADVERTISEMENT

இது இப்படியிருக்க, "தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள் 195-ன் 91பி பிரிவின் கீழ், அரசாணை எண் 891/30-11-2017ன் படி, "தியேட்டர்களில் நிறுத்தும் வாகனத்திற்கு கட்டணம் ரூ.10 எனவும், மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ரூ.20 என கட்டணத்தை நிர்ணயித்த தமிழ்நாடு அரசு, இது மாநகராட்சி, சிறப்பு நிலை நகராட்சிகளுக்குப் பொருந்தும் என்றது. எனினும், இக்கட்டணத்தை தமிழ்நாட்டில் எந்த தியேட்டரும் கடைப்பிடிக்கவில்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம்.

அதைவிடக் கொடுமையானது வாகன நிறுத்துமிட கட்டணமாக பல மடங்கு அதிக ரூபாயைக் பெற்றுக்கொண்டு, "வாகனத்திற்கான பொறுப்பு வாகன உரிமையாளரையே சாரும்." என ரசீதில் அச்சிட்டுக் கொடுக்கிறார்கள். வாகனத்திற்கு கட்டணம் வாங்கிக்கொண்டு வாகனத்திற்கு பொறுப்பு தாங்களே.!" எனக் கூறுவது எவ்வகையில் நியாயம்.? படித்துறை பாண்டியவே ஓவர்டேக் பண்றீங்களேப்பா.!" என்கின்றனர் பொதுமக்கள். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா.? என்பது தான் தற்பொழுதைய கேள்வி.?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT