ADVERTISEMENT

எட்டு மாதங்களில் தி.மு.க ஆட்சியா..? முதல்வர் எடப்பாடி சுவாரசிய பதில்!

04:21 PM Sep 22, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்குப் பின்னர், தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ADVERTISEMENT

"தமிழகம் முழுவதுமே கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. முதலமைச்சரின் சிறப்புக் குறைதீர்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மனுக்களைப் பெற்று வருகின்றனர். ரூபாய் 14,000 கோடியில் காவிரி- குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால், இராமநாதபுரம் மாவட்டம் செழிப்படையும். காவிரி- குண்டாறு திட்டத்தின் மூலம் இராமநாதபுரத்தில் உள்ள நீர் நிலைகள் செழிப்படையும். இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம் செய்யும் என்னை விவசாயி என்றுதான் என்னால் கூறிக் கொள்ள முடியும். ஒரு விவசாயி என்பதால் தான் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. விவசாயம் பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், விவசாயம் செய்பவன். விவசாயிகளுக்குப் பலன் அளிக்கக் கூடியவை என்பதால் தான் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஆதரித்தோம். ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பார் போல, அதனால் தான் எட்டு மாதங்களில் தி.மு.க ஆட்சி வரும் என்கிறார். நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. மக்களை மட்டும் தான் பார்க்கிறோம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT