ADVERTISEMENT

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு! சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!!  முருகபக்தர்கள் மகிழ்ச்சி!

11:45 PM Aug 14, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பழனி பஞ்சாமிர்தத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் பிரச்சாரம் பெற்ற பெருமையை பெறுகிறது.

ADVERTISEMENT


பொதுவாக குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருட்களோ மகத்துவமும் தனித்துவம் பெற்று இருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம். புவிசார் குறியீடு பொருட்கள் சட்டம் 2003 இல் அமல்படுத்தப்பட்டது .

நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு தனி வரலாறு தயாரிப்பு முறை தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக இந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை , தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது போல் மேலும் பல பொருட்கள் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கொடைக்கானல் மலை பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29 ஆக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.

புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. மலைவாழைப்பழம், நாட்டு சக்கரை, பசு நெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது . இதனுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்க்கப்பட்டு ருசி அதிகரிக்கப்படுகிறது. தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிருதம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு முருக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. ஒரு சொட்டு தண்ணீர் பட்டால் கூட கெட்டுப்போய்விடும் தன்மை கொண்டது .

பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கை பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்புமிக்க பழனி பஞ்சாமிர்தத்தில் புவிசார் குறியீடு வழங்கும்படி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது .

இது சம்பந்தமாக பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜிடம் கேட்டபோது, பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கொடுக்க டெல்லியில் அறிக்கை கொடுக்க இருக்கிறார்கள். மற்றபடி எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வரவில்லை என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT