ADVERTISEMENT

பாலமேடு ஜல்லிக்கட்டு; மூன்றாவது இடத்தில் இருந்த அரவிந்த் உயிரிழப்பு

01:37 PM Jan 16, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 1000 காளைகள் களம் காண்கின்றன. இப்போட்டியில் முதல் சுற்றில் 92 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதல் சுற்றின் முடிவில் 7 காளைகளைப் பிடித்த பாலமேட்டினைச் சேர்ந்த ராஜா முதல் இடத்திலும், 6 காளைகளைப் பிடித்து அரவிந்த் 2 ஆவது இடத்திலும், 3 காளைகளைப் பிடித்து அஜித் 3 ஆவது இடத்திலும் இருந்தனர்.

இரண்டாவது சுற்றின் முடிவில் 9 காளைகளைப் பிடித்து ராஜா மற்றும் மணி ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். 8 காளைகளைப் பிடித்த அரவிந்த் இரண்டாவது இடத்தில் இருந்தார். மூன்றாவது சுற்றின் முடிவில் 15 காளைகளை அடக்கி மணி முதல் இடத்திலும் 11 காளைகளை அடக்கி ராஜா 2 ஆவது இடத்திலும் 9 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

நான்காம் சுற்றின் முடிவில் இதுவரை 414 காளைகள் களம் கண்டுள்ளன. 16 காளைகளை அடக்கி மணி என்பவர் முதல் இடத்திலும் 11 காளைகளை அடக்கி ராஜா இரண்டாவது இடத்திலும் 9 காளைகளை அடக்கி அரவிந்த் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் மூன்றாவது இடத்தில் இருந்த அரவிந்த் காளையைப் பிடிக்க முற்பட்டபோது காளை அவரை முட்டியது. இதனால் படுகாயமடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்., சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் இதுவரை 9 காளைகளை அடக்கியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT