ADVERTISEMENT

"நம்ம ஊரு, நம்ம முன்னேற்றம்" - முகநூல் முயற்சியாளர்கள்.

04:35 PM Mar 21, 2019 | Anonymous (not verified)

மனிதன் அன்றாட தேவையாக விளங்குவது தான் தண்ணீர். விவசாயம், உயிரிணங்களுக்கான வாழ்வியல் என அனைத்திலும் முதன்மை தேவையாக விளங்குவது தண்ணீர். தண்ணீரின்மையால் பல்வேறு கிராமங்கள் விவசாய நிலங்கள், விவசாயிகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் என அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ள இச்சூழலில் இளைஞர்களாகிய நாம் ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துப் பயணிக்க வேண்டியுள்ள கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இச்சூழலில் சமூகவலைதளங்களில் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தன் கிராம மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் அனைவருக்கும் வந்துவிடாது. ஆனால் அதை மிக எளிதாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர் முகநூல் பிரியர்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுககல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள ஜெயநாயக்கன்பட்டியில் இருபது வருடங்களுக்கு முன் விவசாயம் , கால்நடைகள் , நீர்நிலைகள் மற்றும் மக்களின் வருமானநிலை என அனைத்தும் உயர்ந்து காணப்பட்ட இக்கிராமத்தில் இன்று குடிநீருக்கே பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளன. இதனால் விவசாயம், கால்நடை என அனைத்தும் அழிவின் விழிம்பை நோக்கிச் சென்றுவிட்டது.ஊர் மக்கள் தங்கள் வருமானத்தைத் தேடி பெரும் நகரங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துவிட்டனர். அச்சூழலில் தன் கிராமத்தை காக்க புயலன் திறன்ட இளைஞர்கள் தங்களின் விடாமுயற்சியால் பல்வேறு இன்னல்களை சந்தித்தாவது கிராமத்தை பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற முயற்சியில் ஒரு முகநூல் அமைப்பை உருவாக்கினர்.

பள்ளிப்பயிலும் பருவத்தில் இருந்தே தன் கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் அனலாக பறக்க கிராம இளைஞர்கள் இணைந்து "நம்ம ஊரு, நம்ம முன்றேற்றம்", என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றது என்பதை ஆராய்ந்து அதற்காக செயல்பட தொடங்கினர்.


முதல் கட்டமாக தங்களுடைய பகுதியில் பெரும் பிரச்சனையாக திகழ்ந்த குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்தனர்.பொதுவாக நிலக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதம் ஒருமுறை குடிநீர் விநியோகம் இன்றும் வழங்கப்படுகின்றன.ஆனால் இந்த முகநூல் பிரியர்கள் தங்கள் முதல் முயற்சியை சொந்த ஊரிலேயே நிறைவேற்ற எண்ணி அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில் பொது இடத்தில் 20- க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அமைத்து அதில் மாதம் மூன்று அல்லது நான்கு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.


அதுமட்டுமின்றி தங்கள் கிராமத்தில் வருங்கால தலைமுறையை நல்வழியில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கிராம குழந்தைகளுக்கு சமூக உணர்வுகளுடன் கூடிய மாலைநேரப்பள்ளி என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படிப்பை வழங்கிவருகிறனர். மாதம் ஒரு முறை மாணவர்களுக்கு வருங்காலங்களில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் அதை தவிர்க்க நாம் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.மாணவர்களுக்கு ஏற்ற கட்டமைப்புக் கொண்ட ஓர் இடத்தை ஏற்பாடு செய்து, அதைச்சுற்றிலும் மாணவர்கள் வளர்க்கப்பட்ட மரங்களே மாணவர்களின் முயற்சியை அடையாளப்படுத்துகின்றது. இவ்வமைப்பினர் தங்களுக்கான செலவினை தாங்களே பூர்த்திச்செய்து கொள்கின்றனர்.

சமூகவளைதளங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு சவாலாக விளங்குகின்றனர். இது போன்ற சமூக போராளிகளின் முயற்சிகள் பல.
தன்னெழுச்சியாக முன்வந்து தொண்டாற்றும் இதுபோன்ற சமூக போராளிகளை நாமும் பாராட்டுவோம்.


பா.விக்னேஷ் பெருமாள்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT