ADVERTISEMENT

ஆஸ்கரில் வரலாறு படைத்த இந்தியா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

09:25 AM Mar 13, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

அதில், சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) வென்றுள்ளது. தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படம், தமிழ்நாட்டின் முதுமலையில் இரு யானைக்குட்டிகளை பராமரிக்கும் முதுமலை பாகன் தம்பதி குறித்த ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியத் தயாரிப்பிற்காக முதன்முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததை விட சிறந்த செய்தி இல்லை. ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ இன் பொறுமையான உருவாக்கம் மற்றும் நகரும் கதை அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கரை வென்று முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் ஆஸ்கர் வென்றது எனும் வரலாற்றை படைத்துள்ளது” என்று குறிப்பிட்டு, பாடலின் இசை அமைப்பாளர் உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT