Skip to main content

ஆஸ்கரை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Nattu Nattu song won Oscar

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். 

 

அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை குஹ்லிர்மொ டில் டோரோஸ் பினோஷியோ ( Guillermo del Toro's Pinocchio) வென்றது.

 

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான (Best Makeup and Hairstyling) ஆஸ்கர் விருதை தி வேல் (The Whale) படத்திற்காக அட்ரின் மொரொட், ஜூடி சின், அனிமேரி பிராட்லி வென்றனர்.

 

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்திற்காக ஜேமி லீ குருஷ்டீஸ் வென்றார்.

 

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை ‘பிளாக் பேந்தர்ஸ்: வகாண்டா பார்எவர்’ (Black Panther: Wakanda Forever) படத்திற்காக ரூத் கார்டர் வென்றார்.

 

சிறந்த ஒளிப்பதிவுக்கான (Best Cinematography) ஆஸ்கர் விருதை ‘ஆல் குயைட் ஆன் தி வெஸ்ட்டர்ன் பாண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் பிரண்ட் வென்றார்.

 

சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers) வென்றுள்ளது. தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படம், தமிழ்நாட்டின் முதுமலையில் இரு யானைக்குட்டிகளைப் பராமரிக்கும் முதுமலை பாகன் தம்பதி குறித்த ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Nattu Nattu song won Oscar

 

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி இசையில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பாடப்பட்டது. இந்தப் பாட்டிற்கு கலைஞர்கள் நடனமாடினர். இந்தப் பாடலை பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் ஆஸ்கர் மேடையில் பாடினர்.

 

இந்நிலையில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்தப் பாடலுக்கு இசை அமைத்த கீரவாணிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடலுக்கான ஆஸ்கர் விருதை பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசை அமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பெற்றனர். நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தது. ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதைப் பெற்ற இரண்டாவது இந்திய இசையமைப்பாளர் கீரவாணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆஸ்கர் நூலகத்தில் தமிழ் படம் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
parking movie in oscar library

திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதுகள். இந்த விருதுகள் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற குழுவால் மேற்பார்வையிட்டு வழங்கப்படுகிறது. இந்தக் குழு மாணவர்கள், இயக்கநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த பலரின் ஆய்வுக்காக திரைப்படங்களில் திரைக்கதைகளை தனது மார்கரெட் ஹெரிக் நூலகத்தில் (Margaret Herrick Library) முக்கிய சேகரிப்பில் சேர்த்துவைக்கும். 

1910ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், பல ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து, தற்போது வரை 11,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் திரைக்கதைகள் உள்ளன. இதில் இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளன. அவை லகான் (2001), தேவதாஸ் (2002), சக் தே இந்தியா (2007), ராக் ஆன் (2008), ராஜநீதி (2010), குசார்சிஹ் (2010), ஆர். ராஜ்குமார் (2013), ஹேப்பி நியூ இயர் (2014), பார்ச்ட் (2015), பேபி (2015), 'செல்லோ ஷோ' (2022), ஸ்விகடோ (2022) ஆகும். 

இந்த வரிசையில் தற்போது தமிழ் படம் ஒன்று ஆஸ்கரின் நூலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ பட திரைக்கதை தற்போது ஆஸ்கரின் நூலகத்தில் முக்கிய சேகரிப்பில் நிரந்தர சேகரிப்பாகவுள்ளது. இதனைப் படக்குழு தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

parking movie in oscar library

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல நடிகர்களும் இதில் நடித்திருந்தனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்ற இப்படம் தற்போது ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. 

Next Story

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
oscar 2025 update

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.