ADVERTISEMENT

“நீலகிரி புலியைக் கொல்லக்கூடாது” - வழக்கு தொடர்ந்த உத்தரப் பிரதேச நபர்

04:56 PM Oct 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த, சந்திரன்(51) என்பவரை, 24ம் தேதி தாக்கிக் கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் புலியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, புலியைச் சுட்டுக் கொல்வது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ் பிறப்பித்துள்ளார்.

இதை எதிர்த்து உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT