ADVERTISEMENT

ஆரஞ்ச் அலர்ட்: அடுத்த 3 தினங்களுக்கு மிக கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்!

11:10 AM Oct 20, 2019 | santhoshb@nakk…

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் சுமார் 55 கி. மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், கேரளா மற்றும் கர்நாடக மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT


சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோயம்பேடு, வடபழனி,கே.கே. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம், மாம்பலம், செங்குன்றம், பொன்னேரி, சேத்துப்பட்டு, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT