ADVERTISEMENT

மகனுக்காக மற்ற வேட்பாளர்களை தோற்கடித்தாரா ஓ.பி.எஸ்?

12:52 PM May 24, 2019 | Anonymous (not verified)

இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே கிடைத்துள்ளது.தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்றுள்ளார்.இதனால் அதிமுக கட்சியில் நேற்றிலிருந்து ஒரு விவாதமும், சர்ச்சையும் கிளம்பியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இதன் பின்னணி நிலவரம் என்னவென்று விசாரித்த போது, தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்தே ஓ.பி.எஸ்.தனது ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் வாங்கி கொடுப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும், கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் வாங்கி கொடுக்கவில்லை என்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.இந்த நிலையில் தேனி தொகுதியில் மகனுக்காக ஓ.பி.எஸ் காட்டிய ஆர்வத்தை மற்ற வேட்பாளர்கள் நின்ற தொகுதியில் காட்டவில்லை என்று அதிமுகவினர் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும் அதிமுக கூட்டணியில் மகன் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் மத்தியில் பாஜக அரசிடம் மத்திய மந்திரி பதவி எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT