ADVERTISEMENT

கலெக்டர் பல்லவிக்கு எதிராக ஒபிஎஸ்!;+2 பொதுத்தேர்வுக்கு வாழ்த்து கூறுவதில் போட்டா போட்டி!

03:02 PM Mar 01, 2019 | sakthivel.m

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 88 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு இன்று எழுதினார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வரக்கூடிய பிளஸ்-2 தேர்வை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்கூறி இரண்டு பக்கத்துக்கு செய்தி வெளியிட்டிருந்தார். அதைக் கண்டு பொதுமக்களும், மாணவ மாணவிகளும் கலெக்டரின் வாழ்த்துச் செய்தியை கண்டு பாராட்டி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான் திடீரென துணை முதல்வரான ஓபிஎஸ்சும் பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறி திடீரென வாட்சப் மூலம் ஒரு ஆடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசி இருப்பதாவது,

"என் அன்பான மாணவ-மாணவிகளே வணக்கம். நான் உங்கள் ஓபிஎஸ் பேசுகிறேன். இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதயிருக்கிறீர்கள். சாதிப்பதற்கான திருப்புமுனையை இந்த பொதுத்தேர்வு தீர்மானிக்கிறது. எனவே மாணவ மாணவிகள் கவனத்தை திசை திருப்பாமல் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்"

என்று துணை முதல்வர் ஓபிஎஸ் வாட்சப் மூலம் ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே மாவட்ட கலெக்டர் பல்லவிக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்த மாவட்ட கலெக்டர் பொருப்பேற்று ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் தனக்கு சாதகமாக வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பல்லவி செயல்படமாட்டார் என்பதற்காக பணியிடமாற்றம் செய்யும் முயற்சியிலும் ஓபிஎஸ் களம் இறங்கி வருகிறார். இந்த நிலையில் பிளஸ்டூ மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறியதைக் கண்டு தானும் வாழ்த்துக் கூறியது போல் ஒரு ஆடியோவை வெளியிட்டு அதிலும் ஓபிஎஸ் அரசியல் நடத்தி வருகிறார். உண்மையிலேயே மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறுகிறார் என்றால் வருடம் தோறும் துணை முதல்வரான ஓபிஎஸ் வாழ்த்து கூறி இருக்கலாமே இப்பொழுது திடீரென மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து கூறியதை கண்டு தானும் வாழ்த்துக் கூறிதன் மூலம் பொதுமக்கள் மத்தியிலும் மாணவ மாணவிள் மத்தியிலும் ஒபிஎஸ் நல்ல பெயர் எடுக்கலாம் என்று நாடகமாடி வருகிறார் என்பதுதான் உண்மை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT